Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அம்னோ இழிவாகப் பார்க்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

அம்னோ இழிவாகப் பார்க்கப்படுகிறது

Share:

நாட்டில் மலாய்க்காரர்களின் ஏகபோக கட்சியென ஒரு காலத்தில் புகழப்பட்ட அம்னோ , இன்று சொந்த கட்சியினரால் மிக இழிவாகப் பார்க்கப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி , 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமான அடைவு நிலையை அம்னோ பதிவு செய்ததைத் தொடர்ந்து துன் மகாதீர் இதனை குறிப்பிட்டுள்ளார். அம்னோவின் போராட்டத்திற்கு அதன் தலைவர்கள் முன்னுரிமை அளிப்பதாக இல்லை என்ற சூழலிலும் அக்கட்சியில் அதிரடியான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.

இந்நிலையில் அம்னோவில் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் தங்களின் தாய்க் கட்சியை இழிவாக பார்க்கும் நிலை ஏற்பட்டிருப்பது , துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரான துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News