சிலாங்கூர்,ஆகஸ்ட் 04-
அடுத்த தேர்தலில், போட்டியிட ஒரு தொகுதியை KOTA RAJA அம்னோ பிரிவுக்கு வழங்குமாறு சிலாங்கூர், KOTA RAJA-வின் அம்னோ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
KOTA RAJA நாடாளுமன்றத் தொகுதி அல்லது SENTOSA, SUNGAI KANDIS, KOTA KEMUNING ஆகிய மாநில சட்டமன்றத் தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதி KOTA RAJA அம்னோ பிரிவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று KOTA RAJA-வின் அம்னோ பிரிவின் தலைவர் TENGKU DATUK SERI ZAFRUL TENGKU ABDUL AZIZ கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்னோ தலைவர் DATUK SERI DR AHMAD ZAHID HAMIDI கலந்து கொண்ட KOTA RAJA அம்னோ பிரிவு பிரதிநிதி கூட்டத்தில் பேசும் போது அந்த வேண்டுகோளை TENGKU DATUK SERI ZAFRUL முன் வைத்தார்.
இதற்கிடையில், அவரின் அந்த கோரிக்கையைக் குறித்து கலந்தாலோசிக்கலாம் என்று DATUK SERI DR AHMAD ZAHID தமது உரையின் போது தெரிவித்தார்.








