May 22, 2026
Thisaigal NewsYouTube
மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் அறுவர் உயிரிழந்தனர்.
தற்போதைய செய்திகள்

மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் அறுவர் உயிரிழந்தனர்.

Share:

மெக்கா, ஜூன் 20-

மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

அதன் வழி, அந்த புனித யாத்திரையில் இதுவரையில் உயிரிழந்த மலேசியர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளதாக, பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் செணட்டர் டத்தோ டாக்டர் முகமது நயீம் பின் மோக்தர் தெரிவித்தார்.

உயிரிழப்பதற்கு முன்பு, அந்த அறுவரும் அவர்களது ஹஜ் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

54 முதல் 75 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் நெஞ்சு வலி, நுரையீரல் அழற்சி, ரத்தத்தில் கிருமித்தொற்று ஆகியவை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல், அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, முகமது நயீம் கூறினார்.

Related News