கோலாலம்பூர், நவம்பர்.28-
தமது முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் மீது லஞ்சம் தொடர்பான புகார் அளிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும், தங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய அதிகாரிகளையும், செயலாளர்களையும் அணுக்கமாகக் கண்காணிக்கும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தமது அரசியல் செயலாளர் ஷாம்சுல் பதவி விலகியிருப்பது குறித்து பிரதமர், அனைத்து அமைச்சர்களுக்கும் விளக்கம் அளித்தார்.
அதே வேளையில் இது போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் தங்கள் அதிகாரிகள் மீது சுமத்தப்படாமல் இருக்க அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.








