Sep 6, 2026
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி சமூகத்துக்கான சிறப்பு அதிகாரியாக மரினா இப்ராஹிம் நியமனம்
தற்போதைய செய்திகள்

ஓராங் அஸ்லி சமூகத்துக்கான சிறப்பு அதிகாரியாக மரினா இப்ராஹிம் நியமனம்

Share:

ஜோகூர் மாநில ஓராங் அஸ்லி சமூகத்துக்கான சிறப்பு அதிகாரியாக முன்னாள் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி, நேற்று இஸ்கண்டார் புத்ரியில் நடைபெற்ற தேசிய ஓராங் அஸ்லி விளையாட்டு நிகழ்வில் அறிவித்தார்.

மாட்சிமை தங்கிய மாமன்னரும், ஜோகூர் சுல்தானுமாகிய சுல்தான் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட்டு வரும் மரினா, மாநிலத்தின் ஓராங் அஸ்லி கிராமங்களுக்குச் சென்று அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மரினா நேரடியாக கிராமங்களுக்குச் சென்று ஓராங் அஸ்லி சமூகத்தின் சவால்களைப் புரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினராக ஒரு முறை பதவி வகித்த மரினா, தொடர்ந்து ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதற்கு பதிலாக, தேவைப்படுவோருடன் நேரடியாக இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து