Sep 6, 2026
Thisaigal NewsYouTube
எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து
தற்போதைய செய்திகள்

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

Share:

இந்தோனேசியாவின் மவுண்ட் அனாக் கிராகாதாவ் எரிமலை வெடிப்பால் உருவான எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்த்தா Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியா ஏர்லைன்ஸ், பாத்தேக் ஏர், ஏர் ஆசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மலேசியா-ஜகார்த்தா இடையிலான மொத்தம் 30-க்கும் மேற்பட்ட விமானங்களை இன்று ரத்து செய்துள்ளன.

தேசிய விமானச் சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் கோலாலம்பூர்-ஜகார்த்தா இடையிலான 12 விமானங்களை ரத்து செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது தொடர்பு விவரங்களை “மை புக்கிங்” பகுதியில் புதுப்பித்து, மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் விமான நிலவரங்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே பாத்தேக் ஏர் நிறுவனம் கோலாலம்பூர்-ஜகார்த்தா மற்றும் சுபாங்-ஜகார்த்தா இடையிலான 8 விமானங்களை ரத்து செய்துள்ளது.

விமானப் பாதையில் எரிமலைச் சாம்பல் இருப்பதால் பார்வைத் திறன் குறைதல், விமான வழிகாட்டி அமைப்புகளில் பாதிப்பு மற்றும் இயந்திர செயல்திறனில் சிக்கல் ஏற்படக்கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்து கிடைக்கக்கூடிய பாத்தேக் ஏர் விமானத்திற்குப் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விமான நிறுவனங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பயணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அறிவிப்புகளை வழங்கி வருகின்றன.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

ஓராங் அஸ்லி சமூகத்துக்கான சிறப்பு அதிகாரியாக மரினா இப்ராஹிம் நியமனம்

ஓராங் அஸ்லி சமூகத்துக்கான சிறப்பு அதிகாரியாக மரினா இப்ராஹிம் நியமனம்