ஜோகூர், கெலாங் பாத்தா, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் 15 அடுக்கிலிருந்து தவறி கடலில் விழுந்ததாக நம்பப்படும் கப்பல் பணியாளரான ஓர் அந்நிய நாட்டுத் தொழிலாளியின் சடலம் நேற்று மாலையில் மீட்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர் அலைகளின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவரின் உடல் கடலில் மிதப்பது நேற்று மாலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக இஸ்கன்டார் புத்தெரி தீயணைப்பு, மீட்புப்படையின் கமாண்டர் முஹமாட் கைரி சைனுடின் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு வங்காளதேசப் பணியாளர் என்பது அடையாளம் கூறப்பட்டது. அந்த அந்நிய நாட்டவரை மீட்கும் நடவடிக்கை நேற்று இரவு 8.10 மணியளவில் முடிவுற்றதாக அவர் குறிப்பிட்டார்.








