Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 13-

2019 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி முன்னேற்பாட்டுக்குரிய உதவித் தொகை தொடர்பில் போலி பத்திரத்தை பயன்படுத்தியதாக தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த பெண் தலைமையாசிரியர் ஒருவர் ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

அசத்துக்மல் அப்துல் ரசாக் என்ற 54 வயதுடைய அந்த தலைமையாசிரியர், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அந்த உதவித் தொகையை வழங்கிவிட்டதைப் போன்று போலி பத்திரத்தை தயார்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த பெண் தலைமையாசிரியர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 471 மற்றும் 465 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த தலைமையாசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த தலைமையாசிரியர் விசாரணை கோரியிருப்பதால் SPRM சட்டத்தின் கீழ் அவரை பத்தாயிரம் வெள்ளி ஜாமீனிவில் விடுவிப்பதற்கு நீதிபதி முகமது அலிமி முஸ்தபா அனுமதி அளித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை