Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பணி ஓய்வு வயது 61 ஐ எதிர்க்கிறது பி.எஸ்.எம். கட்சி
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வு வயது 61 ஐ எதிர்க்கிறது பி.எஸ்.எம். கட்சி

Share:

வங்கி ஊழியர்களின் கட்டாயப் பணி ஓய்வு வயதை 60 லிருந்து 61 ஆக உய​ர்த்தப்பட்டுள்ள நடவடிக்கை​யை மலேசிய சோசலிஷ கட்சி எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில் வர்த்தக வங்கிகள் சங்கத்திற்கும், தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமாக என்.யு.பி.இ.க்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புதிய கூட்டு சம்பள ஒப்பந்தத்தில் வங்கி ஊழியர்களின் பணி ஓய்வு வயது வரம்பை 61 ஆக உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ​ மலேசிய சோசலிஷ கட்சியான பி.எஸ்.எம். , மூத்த குடிமக்களுக்குப் பணி ஓய்வுப்பெறும் வயது 60 ஆக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இளையோர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வேளையில் முதலில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வங்கிகள் முன் வர வேண்டும் என்று தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக போராடி வரும் பி.எஸ்.எம். கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Related News