Oct 15, 2026
Thisaigal NewsYouTube

தன் குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தன் குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டா

டிச. 27-

எகிப்தை சேர்ந்த 37 வயது ஆடவர் ஒருவர், தன் குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். அவர் தன் நான்கு வயது மகனின் கழுத்தை தொலைபேசி கம்பியால் சுற்றியதாகவும், ஒரு வயது மகளை கட்டிலில் தூக்கி எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி காலை பிரிக்பீல்ட்ஸில் உள்ள அவரது வாடகை வீட்டில் நடந்துள்ளது.

குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (a)இன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அரசு வழக்கறிஞர் oshua Tee Yee Khuan , குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். ஏனெனில், இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்றும், மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

நீதிபதி Siti Aminah Ghazali , வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்