கிள்ளான், டிசம்பர்.11-
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 80 ஆவது பிறந்த தின விழாவையொட்டி தொடர்புத்துறை அமைச்சரும், அரசாங்கப் பேச்சாளருமான டத்தோ ஃபாமி ஃபாட்சீலுக்கு டத்தோ அந்தஸ்தைக் குறிக்கும் டத்தோ படுக்கா மாஹ்கோத்தா சிலாங்கூர் எனும் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
இன்று கிள்ளான், ஆலாம் ஷா அரண்மனையில் நடைபெற்ற விருதளிப்புச் சடங்கில் டத்தோ ஃபாமி ஃபாட்சீலுக்கு சிலாங்கூர் சுல்தான், உயரிய விருதை வழங்கி சிறப்பு செய்தார். பல்வேறு உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை பெற்ற மொத்தம் 88 பேரில் டத்தோ ஃபாமி ஃபாட்சீலும் ஒருவர் ஆவார்.
ஆண்களுக்கு டத்தோ அந்தஸ்தைக் குறிக்கும் விருதும், பெண்களுக்கு டத்தோ படுக்கா அந்தஸ்தைக் குறிக்கும் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை மொத்தம் 16 பேர் பெற்றனர்.
இந்த விருதளிப்பு சடங்கில் சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசுரி சிலாங்கூர் நோராஷிகின் மற்றும் ராஜா மூடா சிலாங்கூர், தெங்கு அமீர் ஷா, அவரின் துணைவியார் டத்தின் படுக்கா ஶ்ரீ அஃப்ஸா ஃபாடினி அப்துல் அஸிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.








