தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு கீழறுப்பு முயற்சியையும் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலத்தின் மூலமாக தங்களுக்கு ஆதரவு இருப்பதாக கூறி, சிலர் செயல்பட்டாலும் அதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
தம்மைப் பொறுத்தவரையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவாக உள்ளது. அந்த அரசாங்கம் தனது தவணைக்காலத்தை நிச்சயம் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கிடையில் கீழறுப்பு முயற்சி தொடர்பாக வரக்கூடிய செய்திகளை தாம் கண்டு கொள்ளப் போவதில்லை என்று அன்வார் விளக்கினார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


