கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
கோலாலம்பூர், ஸ்தாபாக், தாமான் மெலாத்தியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி வீடுகளிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் க்.
கோலாலம்பூர் தார் கல்லூரியின் அருகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இந்த இரு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. உயிரிழந்த இரண்டு மாணவர்களும் அருகில் உள்ள துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவார்.
நேற்று காலை 6.45 மணிக்கு அந்த பல்கலைக்கழகம் அருகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 22 வயதுடைய மாணவி ஒருவர், 22 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
அதே அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இரவு 8.30 மணிக்கு 21 வயதுடைய ஒரு மாணவன் கீழே விழுந்து மரணமுற்றார். அந்த மாணவன் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் உச்சத்தில் உள்ள கெஃபேடேரியாவிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்று, மற்றொன்றுடன் தொடர்பு இல்லை என்ற போதிலும் இரண்டுமே ஒரே வீடமைப்புப் பகுதியில் நடந்திருப்பது அந்தப் பகுதியில் தங்கியுள்ள மாணவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.








