Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பாலிக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலிக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து

ஜகார்த்தா, ஜூன்.18-

இந்தோனேசியா, பாலிக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் பிரதான தீவு சுற்றலாத் தளமான பாலியில் 1,703 மீட்டர் உயரமுள்ள லெவோதோபி லகி-லகி எரிமலை குமுறத் தொடங்கியதால், வான் போக்குவரத்துப் பாதையில் புகையும், சாம்பலும் சூழ்ந்த நிலையில் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

காலையிலிருந்து 10 மணி வரையில் 24 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட்ஸ்டார், விர்ஜின் ஆஸ்திரேலியா, ஏர் இந்தியா, ஏர் நியூசிலண்ட், ஸ்கூட், ஜுனியாவ் ஏர்லைன்ஸ் போன்ற விமானச் சேவைகள் அதில் அடங்கும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →