கோத்தா பாரு, ஆகஸ்ட்.22-
தாய்லாந்தில் நராத்திவாட்டில் உள்ள தக்பாய் நகரில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, தாய்லாந்துக்கு அவசியமற்றப் பயணங்களை மலேசியர்கள் ஒத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிளந்தான் சுற்றுலா, கலாச்சாரம், கலை, பாரம்பரியத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ கமாருடின் முகமட் நோர், அண்டை நாட்டிற்கு பயணிக்க வேண்டியவர்களுக்கு பாதுகாப்பு முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.








