ஜார்ஜ்டவுன், டிசம்பர்.01-
பினாங்கில் இன்று அதிகாலை நடந்த வேன் விபத்தில், பெண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததோடு, 7 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலை 5.59 மணியளவில், 7 பெண் தொழிலாளர்களோடு, ஆடவர் ஒருவர் செலுத்திய அந்த வாகனம், Jalan Mount Erskine அருகே, கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
இச்சம்பவத்தில், அதில் பயணித்த 8 பேரும் வாகனத்தின் நசுங்கிய பாகங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், உடனடியாக 8 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, உள்ளே சிக்கியிருந்த 7 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.
என்றாலும், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.








