நியூயார்க், செப்டம்பர்.27-
இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்காக, ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் நெருக்கமான ஒத்துழைப்பை நாட வேண்டுமென்று The Hague குழுவை வலியுறுத்தியுள்ளது மலேசியா.
ஐ.நா சாசனத்தின் ஏழாவது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கவுன்சிலைத் தூண்டுவதற்கு இது மிக முக்கியம் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை , ஐநா பொதுச் சபையின் 80-வது அமர்வில், பாலஸ்தீன விவகாரம் தொடர்பான The Hague குழுவின் உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய முகமட் ஹசான் இதனைத் தெரிவித்துள்ளார்.
காஸாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை நிறுத்துவதற்காக, இஸ்ரேலைத் தனிமைப்படுத்தி அழுத்தம் கொடுக்க இம்முயற்சிகள் கைகொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பச் சாதனங்களை நிறுத்த, The Hague குழு, அமைதி விரும்பும் நாடுகளை ஒன்று திரட்ட வேண்டும் என்றும் முகமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.








