பண்டான் இண்டாவில் நடத்தப்பட்ட ஓபி செகாத்தான் பெர்செபாடு சோதனையில், ஆடவர் ஒருவர் சமூக ஊடகம் வாயிலாக வாகனமோட்டுவதற்கான போலி உரிமத்தை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது என அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
காலை 10 மணி அளவில் தொடங்கப்பட்ட அந்த அதிரடிச் சோதனையில் சாலைப் போக்குவரத்துத் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.
32 வயதுடைய அந்த ஆடவர் சமூக ஊடகத்தின் வாயிலாக ஆயிரத்து 200 வெள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் வாங்கியதாக முஹமாட் அசாம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
அந்த ஆடவரையும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் அம்பாங் காவல் துறையின் போக்குவரத்து பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, அவர் மேலும் சொன்னார்.








