கோலாலம்பூர், செப்டம்பர்.29-
கோலாலம்பூரில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றி, அதனை உரிமம் பெற்ற இரும்பு வியாபாரிகளிடம் விற்கும் வாய்ப்பை டிபிகேஎல் பரிசீலித்து வருகிறது.
இந்நடவடிக்கையின் மூலம், பொது வாகன நிறுத்துமிடங்களில், நெரிசலைக் குறைப்பதோடு, காலி இடங்களை அதிகரிக்க முடியும் என்றும் டிபிகேஎல் தெரிவித்துள்ளது.
தாமான் கோனோட், சாலாக் செலாத்தான் மற்றும் பந்தாய் சென்ட்ரல் ஆகிய பகுதிகளிலுள்ள டிபிகேஎல்லின் மூன்று கிடங்குகள் ஏற்கனவே 3,700 கைவிடப்பட்ட வாகனங்களால் நிரம்பியுள்ளதாகவும் டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுதோறும், இது போன்ற வாகனங்களை அகற்ற மில்லியன் கணக்கில் செலவு செய்யும் டிபிகேஎல், அவ்வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்யும் போது 3 லட்சம் ரிங்கிட் மட்டுமே வருவாய் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.








