May 24, 2026
Thisaigal NewsYouTube
மஹ்கோட்டா இடைத்தேர்தலில் வெற்றி உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

மஹ்கோட்டா இடைத்தேர்தலில் வெற்றி உறுதி செய்யப்படும்

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 27-

அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு மசீச கடுமையாக பாடுபடும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் உறுதி அளித்துள்ளார்.

இடைத் தேர்தல் பிரச்சசாரத்தின் போது பாரிசான் நேஷனல் தேர்தல் கேந்திரம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை எல்லா நிலைகளிலும் மசீச உறுதி செய்யும் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாரிசான் நேஷனல் தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை நேற்று அவரின் அலுவலகத்தில் சந்தித்து பேசியதாக டாக்டர் வீ கா சியோங், தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related News