போர்ட்டிக்சன், செப்டம்பர்.06-
கடந்த வியாழக்கிழமை போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸ், சுங்கை லிங்கி சாலை மேம்பாலத்தில் கார் ஒன்று ஆற்றில் விழுந்து, மரணம் அடைந்த இரண்டு சிறார்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அந்த உடன் பிறப்புகளின் மதம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய இலாகா தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு சிறார்களும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிச் செய்யப்படுமானால் அதற்கேற்ற முறைப்படி இரண்டு சிறார்களின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்படும் என்று சமய இலாகாவின் இயக்குநர் முகமட் அஸ்ரி அப்துல்லா தெரிவித்தார்.
ஒரு பெண்ணுடன் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த சிறார்களின் 46 வயது தந்தை அளித்த வாக்குமூலத்தைப் போன்று அந்த சிறார்கள் இஸ்லாமியர்கள் என்பதற்கு கிளந்தானின் எந்தவொரு பதிவும் இல்லை. எனவே அந்த சிறார்களின் சமய அந்தஸ்தை ஆராயும்படி சமய இலாகாவை போலீஸ் துறை கேட்டுக் கொண்டுள்ளதாக முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.








