May 26, 2026
Thisaigal NewsYouTube
16 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு சுப்பிரமணியத்திற்கு விடியல் பிறந்தது
தற்போதைய செய்திகள்

16 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு சுப்பிரமணியத்திற்கு விடியல் பிறந்தது

Share:

கோலாலம்பூர், டிச.9-

தாம் வேலை நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறி, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிராக அதன் முன்னாள் பாதுகாவலர் எல். சுப்பிரமணியம் நடத்திய 16 ஆண்டு கால சட்டப்போராட்டம் இறுதியில் சுமூகமாக தீர்வு காணப்பட்டது.

அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த முடியுமா? என்று அவநம்பிக்கையை தூக்கி, எறிந்து, அந்த தூதகரத்திற்கு எதிராக நீதி கேட்டுப் போராடுவேன் என்று நீண்ட காலமாக போராடி வந்த சுப்பிரமணியம், இறுதியில் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்வதற்கு அமெரிக்கத் தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம்.மின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் உதவியுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு இவ்வழக்கை முன்னெடுத்த சுப்பிரமணியம் வழக்கில் தோல்வி அடைந்த போதிலும் இறுதியில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இவ்வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒரு நாட்டில் தூதரகப் பணிகளில் ஈடுபடும் தூதரகம், சிறப்பு பாதுகாப்பு சலுகையை கொண்டு இருக்கிறது என்ற அடிப்படையில் அமெரிக்கத் தூதரகம் தனது வாதத்தை முன்வைத்தது. தனக்கு இருக்கின்ற சிறப்பு சலுகைகையின் அடிப்படையிலேயே சுப்பிரமணியத்தை வேலை நீக்கம் செய்ததாக அது தனது வாதத்தில் தெரிவித்து வந்தது.

அதேவேளையில் தூதரகங்கள் அந்த சிறப்பு பாதுகாப்பு சலுகை எந்தெந்த விவகாரத்திற்கு கையாள முடியும் என்பதை வியாக்கியாணப்படுத்துவற்கு நடைபெற்ற இவ்வழக்கில் இறுதியில் நியாமான இழப்பிட்டுத் தொகையுடன் இவ்வழக்கை நீதிமன்றதிற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அமெரிக்கத் தூரகம் முன்வந்தது.

அதன் அடிப்படையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அமெரிக்கத் தூதகரத்திற்குள் மீண்டும் காலெடுத்து வைத்த சுப்பிரமணியம் தனக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகையை பெற்றுக்கொண்டார் என்று அருள்செல்வத்துடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் சுப்பிரமணியம் இதனை தெரிவித்தார்.

இது உண்மையிலேயே ஒரு கடினமான வழக்கு என்ற போதிலும் வல்லரசுகளை எதிர்த்துப் போராட முடியாது என்பதில்லை. நியாயமும், நேர்மையும் இருந்தால் நீதி நமக்காக காத்திருக்கிறது என்பதற்கு சுப்பிரமணியத்தின் இந்த வழக்கு ஓர் உதாரணமாகும் என்று அருட்செல்வன் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு