Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை, இரக்கம், சகிப்புத்தன்மையைப் போற்றுவோம் – பிரதமர் அன்வார் விசாக தின வாழ்த்து
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை, இரக்கம், சகிப்புத்தன்மையைப் போற்றுவோம் – பிரதமர் அன்வார் விசாக தின வாழ்த்து

Share:

கோலாலம்பூர், மே.31-

இன்று விசாக தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து மலேசியர்களும் நல்லிணக்கமான சமூக வாழ்வின் அடிப்படை விழுமியங்களை சிந்தித்து பார்க்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

அறிவார்ந்த சிந்தனை, மிதமான அணுகுமுறை, இரக்கம் மற்றும் சக மனிதர்களிடம் அன்பு காட்டுதல் போன்ற உயரிய பண்புகள் மத மரபுகளுக்குள் மட்டுமின்றி, பரஸ்பர புரிதலும் மரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இன, மத வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வலுப்படுத்தும் இந்த விழுமியங்கள், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான முக்கிய அடித்தளமாக விளங்குவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இரக்கமும் ஒற்றுமையும் தான் நாட்டின் பலம் என்றும், அமைதியைப் போற்றும் விசாக தினத்தில் உயரிய மனிதநேய விழுமியங்களை போற்றுவோம் என்றும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News