May 31, 2026
Thisaigal NewsYouTube
போர்ட் கிள்ளான் பகுதியில் நடந்த தடியடி மோதல் - 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்

போர்ட் கிள்ளான் பகுதியில் நடந்த தடியடி மோதல் - 5 பேர் கைது

Share:

கிள்ளான், மே.31-

போர்ட் கிள்ளான் பகுதியில் உள்ள ஶ்ரீ பெரந்தாவ் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே நேற்று சிலதரப்பினரிடையே நடந்த தடியடி தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் நேற்று வைரலான காணொளி ஒன்றில், சிலர், தடிகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கும் காட்சிகளும், பலர் அருகில் நின்று அதனை வேடிக்கைப் பார்க்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 4 மணியளவில் போலீசாருக்குப் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜிட் ஹுயே தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் 18 முதல் 47 வயதிற்க்குட்பட்ட 5 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 148-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

பினாங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் திரையரங்கு கட்டிடத்தில் தீவிபத்து - மியன்மார் நாட்டவர் பலி

பினாங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் திரையரங்கு கட்டிடத்தில் தீவிபத்து - மியன்மார் நாட்டவர் பலி

ஜூன் 1 முதல் 24 மணி நேர கேஎல்ஐஏ ஏரோடிரேன் சேவை மீண்டும் தொடக்கம்

ஜூன் 1 முதல் 24 மணி நேர கேஎல்ஐஏ ஏரோடிரேன் சேவை மீண்டும் தொடக்கம்

ஏவுகணை ஒப்புந்தம் இரத்து: உலக நாடுகளின் 'கண்டுகொள்ளா மௌனத்தை' காலிட் கடுமையாகச் சாடினார்

ஏவுகணை ஒப்புந்தம் இரத்து: உலக நாடுகளின் 'கண்டுகொள்ளா மௌனத்தை' காலிட் கடுமையாகச் சாடினார்

புத்ராஜெயாவில் பீரங்கி முழக்கம் – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென போலீஸ் அறிவுறுத்தல்

புத்ராஜெயாவில் பீரங்கி முழக்கம் – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென போலீஸ் அறிவுறுத்தல்

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு