Jun 6, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயாவில் பீரங்கி முழக்கம் – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென போலீஸ் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயாவில் பீரங்கி முழக்கம் – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென போலீஸ் அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், மே.31-

புத்ராஜெயாவிலுள்ள அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வரும் ஜூன் 3 மற்றும் ஜூன் 5 -ஆம் தேதிகளில் கேட்கக்கூடிய பீரங்கி முழக்கங்களால் அச்சமடைய வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு, அரச மரியாதை செலுத்தும் விதமாக நடைபெறும் "Trooping of the Colours Parade" எனப்படும் கொடி வண்ண அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, மலேசிய ஆயுதப் படையினர் சடங்கு முறையிலான பீரங்கி வணக்கத்தைச் செலுத்த உள்ளனர்.

இது குறித்து புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முஹமட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜூன் 3-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் முழு ஒத்திகையின் போது, இரண்டு பீரங்கி குண்டுகள் வெடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், வரும் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் போது 21 பீரங்கி குண்டுகள் ஒரே நேரத்தில் முழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு புத்ராஜெயா Presint 1 -இல் அமைந்துள்ள Dataran Pahlawan Negara-வில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்