Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் 1 முதல் 24 மணி நேர கேஎல்ஐஏ ஏரோடிரேன் சேவை மீண்டும் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

ஜூன் 1 முதல் 24 மணி நேர கேஎல்ஐஏ ஏரோடிரேன் சேவை மீண்டும் தொடக்கம்

Share:

புத்ராஜெயா, மே.31-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல் உள்ள ஏரோடிரேன் சேவையானது நாளை ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் உறுதிப்படுத்தியுள்ளார்.

தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான Apad உடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த விரிவான நடவடிக்கைத் திட்டம் நிறைவடைந்ததுடன், சுயாதீன ரயில்வே மதிப்பீட்டாளர்களின் ஆய்வும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏரோடிரேன் சேவையின் செயல்பாடுகளை APAD தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குமுறையை மேற்பார்வையிடும் என்றும், சேவைத் தரத்தைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் Malaysia Airports Holdings Berhad நிறுவனத்திடமே இருக்கும் என்றும் அந்தோணி லோக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News