Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆசியானின் முழு உறுப்பினராகுகிறது தீமோர் லெஸ்டே
தற்போதைய செய்திகள்

ஆசியானின் முழு உறுப்பினராகுகிறது தீமோர் லெஸ்டே

Share:

ஶ்ரீ இஸ்கண்டார், அக்டோபர்.11-

தென்கிழக்காசியாவில் தீமோர் தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தீமோர் லெஸ்டெ நாடு, வரும் அக்டோபர் 26 ஆம் தேதி, ஆசியானின் ஓர் உறுப்பு நாடாக அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தென்கிழக்காசிய பிராந்தியத்தில் ஓர் இளம் நாடான தீமோர் லெஸ்டெ, ஆசியானின் முழு அங்கத்துவம் பெறுவதை உறுதிச் செய்வதற்கு முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு வெளியுறவு அமைச்சின் வாயிலாக மலேசியா முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆசியானின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ஆசியானின் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் தீமோர் லெஸ்டெ இணைந்த போது, அதன் பிரவேசத்தை மலேசியா முழுமையாக ஆதரித்ததையும் டத்தோ ஶ்ரீ அன்வார் நினைவு கூர்ந்தார்.

இன்று ஜோகூர், ஶ்ரீ இஸ்கண்டாரில் பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Related News