Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கார் தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் மாண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் மாண்டார்

செர்டாங்,அக்டோபர் 05-

கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் செர்டாங்,செரி கெம்பாங்கன், தமான் புக்கிட் செர்டாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.39 மணியளவில் தாங்கள் ஓர் அவசர அழைப்பைப்பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

90 விழுக்காடு முற்றாக அழிந்து விட்ட காரில் உள்ளூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் மரணம் அடைந்ததார். அவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →