புக்கிட் காயு ஹித்தாம், செப்டம்பர்.01-
தனது காதலருடன் தாய்லாந்துப் பயணம் முடிந்து மலேசியா திரும்பிய படிவம் 6 மாணவி, போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கினார்.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக அவரையும், அவரது காதலரையும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
மலேசியா- தாய்லாந்து எல்லையில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் மெர்டேக்கா 2025 நடவடிக்கையின் போது, அம்மாணவியுடன் சேர்த்து மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கெடா மாநில தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குநர் கைருல் அன்வார் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
18 முதல் 40 வயதிற்குட்பட்ட மொத்தம் 31 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 23 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டதாகவும் கைருல் அன்வார் அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.








