Jul 21, 2026
Thisaigal NewsYouTube
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - மூன்று பேர் பலி
தற்போதைய செய்திகள்

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - மூன்று பேர் பலி

Share:

கிளந்தான் மாநிலம், தானா மேரா, கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின், பத்தாங் மெர்பாவ் பகுதியில் இன்று அதிகாலை கோழி விநியோக லாரி ஒன்று, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இது குறித்து தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் மாட் நூரி மொகமட் கூறுகையில், இன்று அதிகாலை 4.26 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவித்துள்ளார்.

பேராக் மாநிலத்திலிருந்து கிளாந்தான் நோக்கி கோழி விநியோகப் பொருட்களை ஏற்றிச் சென்ற அந்த 5 டன் லாரி, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லரில் மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் லோரியில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

உயிரிழந்தவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related News