May 22, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில், ஒருவர் உயிரிழப்பு; எண்மர் காயம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில், ஒருவர் உயிரிழப்பு; எண்மர் காயம்

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 19-

ஜொகூர், லெபுஹ் பெர்சிசிரான் பண்தாய் ஜேபி-நுசா ஜெயா நெடுஞ்சாலையில், லெகோலேண்ட் முன்புறம் நிகழ்ந்த வோக்ஸ்வேகன் பாஸ்சாட் வாகனம் உடனான கோர சாலை விபத்தில் டொயோட்டா இன்னோவா ரக வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்றிரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில், டொயோட்டா இன்னோவா-வில் உடன் பயணித்த எழுவரும் வோக்ஸ்வேகன் பாஸ்சாட் வாகன ஓட்டுநரும் காயங்களுக்கு இலக்காகியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக, அம்மாநில தீயணைப்பு மீட்பு துறை கூறியது.

முன்னதாக, நேற்றிரவு மணி 10.30 அளவில் அவசர அழைப்பைப் பெற்றதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இஸ்கண்டார் புத்திரி தீயணைப்பு மீட்பு படையினர், விபத்தில் சிக்குண்டவர்களை மீட்டனர்.

Related News