Jul 15, 2026
Thisaigal NewsYouTube
மூலம் போதைப்பொருள் கடத்தல்: 2.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மூலம் போதைப்பொருள் கடத்தல்: 2.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

Share:

பட்டுவாடா சேவை மூலமாக போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற பெரும் சதித்திட்டத்தை அரச மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

சபா, தாவாவ் பகுதியில் உள்ள கூரியர் சேவை நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.9 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கொகெய்ன் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில் சுமார் 2.04 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 4.6 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 8 லட்சத்து 51 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 10.65 கிலோகிராம் கஞ்சா ஆகியவை அடங்கும்.

சபா மாநிலத்தில் மிகப்பெரியளவில் கொக்கேயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று மாநில சுங்கத்துறை இயக்குநர் டாக்டர் அகமட் தவ்பிக் சுலைமான் தெரிவித்தார்.

இதற்கிடையில் மற்றொரு சோதனையில், முறையான சுங்க வரி ஆவணங்கள் இன்றி கிராமப்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 63 ஆயிரத்து 250 ரிங்கிட் மதிப்பிலான காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மூலம் போதைப்பொருள் கடத்தல்: 2.9 மில்லியன் ரிங்கிட் பொருட்... | Thisaigal News