Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.26-

சாலைத் தடுப்பு பணியில் இருந்த காவற்படை அதிகாரியை அவமதிக்கும் வகையிலும், அவர்களை ஏமாற்றிப் பல சோதனைகளைக் கடந்ததாகவும் சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்ட நபர் மீது கிளந்தான் மாநில காவற்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தக் காணொலி, காவற்படையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்ட மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ முஹமட் யுசோஃப் மாமாட், சம்பந்தப்பட்ட நபர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரின் பணியைக் குறைத்து மதிப்பிடுபவர்கள் மீதும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீதும் சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத... | Thisaigal News