கோல கங்சார், செப்டம்பர்.27-
கோல கங்சாரில் இரு கம்பங்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கைகலப்பு குறித்து காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹேய்ஷாம் ஹாருன் தெரிவித்துள்ளார்.
26 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் ஒரு கும்பல், மற்றொரு கும்பலைத் தாக்குவதைச் சித்தரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.








