Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தகவல் அறிந்த சமுதாயமாக தோட்டத் தொழிலாளர்கள் விளங்கிட வேண்டும்
தற்போதைய செய்திகள்

தகவல் அறிந்த சமுதாயமாக தோட்டத் தொழிலாளர்கள் விளங்கிட வேண்டும்

Share:

தகவல் அறிந்த ஒரு சமுதாயமாக தோட்டத் தொழிலாளர்கள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாநில தோட்டத் தொழிலாளர் சங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, ஒரு தோட்டத்தில் பொறுப்பு வகிக்கும் தோட்ட தொழிற்ச்சங்க தலைவர் மற்றும் செயலாளர் நடப்பு சட்ட விதிப்படி ஒரு தொழிலாளரின் நலன் என்ன என்பதை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று டத்தோ ஜி. சங்கரன் வலியுறுத்தினார்.

நேற்று காலை ஜொகூர் குளுவாங் நகரில் உள்ள ஹோட்டல் மெர்டொக்காவில் ஜொகூர் மாநிலத்தில் உள்ள எல்லா தோட்டம் மற்றும் செம்பனை எண்ணெய் ஆலையை சேர்ந்த தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கான தலைமைத்துவப் பயிற்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது டத்தோ ஜி.சங்கரன் இதனை வலியுறுத்தினார்.

இந்த தலைமைத்துவப் பயிற்சியில் பதிவு இலாகா, தொழிலியல் துறை இலாகா மற்றும் சமூக நல பாதுகாப்பு துறை தொடர்பான தகவல்கள் கட்டாயம் இன்று கலந்துக் கொண்டுள்ள பொறுப்பாளர்களுக்கு நன்மையை அளிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். தவிர தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்தில் என்றுமே அரணாக விளங்கி வரும் என்று பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் உறுதி கூறினார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஏ.நவமுகுந்தன் தமது உரையில்
தோட்டத் தொழிலாளர் சங்கம் அன்றும், இன்றும், இனி என்றும் அதன் கட்டமைப்பு பாதையில் சரியாக பயணிப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களின் ஒன்று பட்ட ஆதரவு தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜோகூர் மாநிலத் தலைவர் கே.முருகவேல் மற்றும் மாநில செயலாளர் ஏ.முத்தமிழ்வாணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தலைமைத்துவப் பயிற்சியில் அண்மையில் அகால மரணமுற்ற கெராத்தோங் செம்பனை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவரின் மனைவிக்கு எ.ஐ.எ - க்ரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி மூலமாக மொத்தம் 29 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை டத்தோ ஜி.சங்கரனும், ஏ.நவமுகுந்தனும் வழங்கினர்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்