தளவாட நிர்வாகமான லாஜிஸ்டிக் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி அளிப்பதை உறுதி செய்யும் நோக்கில், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹரூண் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் எதிர்பாராத விதமாக திடீரென கலைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது ஒரு திடீர் த் தேர்தல் என்பதால், அங்கு தற்போது வாக்குப்பெட்டிகள் மட்டுமே தயாராக உள்ளன என்றும், பணியாளர்கள் முதலில் ஜோகூர் தேர்தலை முடித்துவிட்டு பின்னர் நெகிரி செம்பிலான் தேர்தலுக்குத் தயாராக அவகாசம் தேவை என்றும் அவர் விளக்கினார்.
இன்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர் தலைமையகத்தில் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையி் ரம்லான் ஹரூண் இதனை தெரிவித்தார்.








