நிதியமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் 'மைசலாம்' சமூக சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் இதுவரை 1.88 மில்லியன் மலேசியர்கள் பயனடைந்துள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கடந்த 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 1.423 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபஹ்மி, எஸ்டிஆர் எனப்படும் , 'சும்பாங்கான் துனாய் ரஹ்மா' நிதியுதவி பெறுபவர்கள் மற்றும் அவர்களின் துணைகளுக்கு 65 வயது வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
பயனாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தினசரி 50 ரிங்கிட் வீதம் ஆண்டுக்கு அதிகபட்சம் 700 ரிங்கிட் வரை நிதி உதவி வழங்கப்படும் அதேவேளையில் 50 வகையான தீவிர நோய்களுக்கு ஒரே கட்டமாக 8 ரிங்கிட் வரை நிதியுதவி மற்றும் மருத்துவக் கருவிகளுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரிங்கிட் வரை பெற முடியும் என்று அவர் விளக்கினார்.








