கோலாலம்பூர், அக்டோபர்.06-
நாட்டுத் தலைவர்களை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களின் வாயிலாக அச்சுறுத்தல், அவமதித்தல், மிரட்டல் விடுத்தது தொடர்பில் உள்ளூரைச் சேர்ந்த எழுவரைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இந்த எழுவரும் கடந்த செப்டம்பர் 15 க்கும் அக்டோபர் 5 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் டிக் டாக் மற்றும் முக நூல் வாயிலாக இந்த அச்சுறுத்தல்களை விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புலன் விசாரணைக்கு ஏதுவாக எழுவரையும் ஒன்று முதல் 3 நாட்கள் வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








