Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ரத்தினவள்ளி அம்மாவுடன் கால்பந்தாட்டக் club
தற்போதைய செய்திகள்

ரத்தினவள்ளி அம்மாவுடன் கால்பந்தாட்டக் club

Share:

கிள்ளான் வாட்டாரத்தில் முன்னணி கால்பந்தாட்ட கிளப்பான கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி யின் 33 ஆம் ஆண்டு நிறைவு விழா, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி சனிக்கிழமை, கிள்ளான் ஹை தியான் லோ உணவகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மனிதநேயமாமணி ரத்தினவள்ளி அம்மாள், அவரின் கணவர் விஜயராஜ் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோரின் சிறப்பு வருகையோடு நடைபெற்ற இவ்விழாவில் கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 18 கால்பந்தாட்டக் குழுவினர் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்தியர் இளைஞர்கள் கால்பந்தாட்டத் துறையில் சிறந்த விளங்க வேண்டும், தங்கள் பொழுதை நல்ல முறையில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் 33 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி, பலதரமான ஆட்டக்காரர்களை உருவாக்கியிருப்பதுடன் பல குழுக்களுடன் நட்புமுறை ஆட்டத்தில் பங்கு கொண்டு, நட்பு பாராட்டி வந்துள்ளதாக இந்த 33 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் இளம்பரிதி தெரிவித்தார்.

இக்கால்பந்தாட்டக் கிளப்பின் 33 ஆண்டு கால பயணத்தில் இக்கிளப்புடன் ஒன்றித்து பயணம் செய்து பெரும் ஆதரவு நல்கிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பயிற்சிநர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் பங்களிப்பை மகத்தானதாகும்.

அன்பு, நட்பின் அடையாளமாக ஏற்பாடு செய்யக்கூடிய இந்த நிகழ்வின் வாயிலாக மறைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏதாவது உதவி நல்க வேண்டும் என்ற நோக்கில் மனிதநேயமாமணி ரத்தினவள்ளி அம்மாள் விஜயராஜ் சிறப்பு வருகையுடன் இந்த 33 ஆம் ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்வு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் இளம் பரிதி தெரிவித்தார்.

18, 19 வயதில் கால்பந்தாட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய தாங்கள் இன்று 50 வயதை கடந்த போதிலும் இன்னமும் கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி கிளப்பை வெற்றிகரமாக வழிநடத்த முடிகிறது என்றால் தங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைதான் காரணம் என்கிறார் அந்தக் கிளப்பின் கேப்டனும், தலைவருமான ராமு என்ற வேங்கையா.

கிளேங் எக்ஸகூதீவ் மாஸ்டர் எஃப்சி நற்பெயருக்கு எந்தவொரு களங்கமும் ஏற்படாமல் கடந்த 33 ஆண்டு காலமாக வழிநடத்தப்படும் இந்த கிளப்பின் ஒற்றுமை தொடர்ந்து கட்டிக்காக்கப்பட்டு, கால்பந்தாட்டத்தில் சிறந்த கிளப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நோக்கமாகும் என்று ராமு என்ற வேங்கையா குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!