உலு சிலாங்கூர், பத்து பெர்தெங்கே நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டு இருந்த போது மரக்கிளை விழுந்து முறிந்து கீழே விழுந்ததில் மாது ஒருவர் படுகாயத்திற்கு ஆளாகினார். மேலும் இருவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று காலை 11.50 மணியளவில் நிகழ்ந்தது. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையை சேர்ந்த 5 வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
24 வயது கைருன்னிசா முகமது தீன், 24 வயது அமிருல் இயாயுடின் முகமட் டின், 21 வயது அமிரா பட்ரிஷியா அடாம் கான் ஆகியோரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் கூறப்பட்டது. இதில் கடுமையான காயங்களுங்களுக்கு ஆளான மாது, கோலகுபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஷா ஆலாமை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


