Mar 23, 2026
Thisaigal NewsYouTube
PAS - பெர்சத்து இடையிலான விரிசல் பெரிதாகின்றது
தற்போதைய செய்திகள்

PAS - பெர்சத்து இடையிலான விரிசல் பெரிதாகின்றது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 03-

எதிர்க்கட்சிகளான PAS மற்றும் பெர்சத்து இடையிலான கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பெரிக்காதான் நசியனால்-லின் பெயர் மழுங்கடிப்பட்டவாறு, PAS கட்சியின் உதவித்தலைவர் மோஹமட் அமர் அப்துல்லாஹ், அவரது பேஸ்புக் பதிவில் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்துள்ளது, அதனை தெளிவாக புலப்படுத்துவதாக, தேசிய பேராசியர் மன்றத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் அஸ்மி ஹாசன் தெரிவித்தார்.

சிலாங்கூர் , கோல குபு பாரு இடைத்தேர்தலிலிருந்து அவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட தொடங்கியது.

குறிப்பாக, பெர்சத்து -வின் வேட்பாளர் கய்ருள் அசாறி சவுத் -ட்டின் வெற்றிக்காக, PAS கட்சி தீவிரமான பரப்புரைகளை மேற்கொள்ளவில்லை. இதர மாநிலங்களிலிருந்து அக்கட்சியின் பிரபல தலைவர்களும் பரப்புரைகளை மேற்கொள்ள வரவில்லை.

சுங்கை பக்காப் இடைத்தேர்தலில், பெர்சத்து -வின் துணையின்றி தங்களால் செயல்பட முடியும் என்பதை PAS கட்சி காட்ட முயல்வதாகவும்அஸ்மி ஹாசன் கூறினார்.

Related News