May 6, 2026
Thisaigal NewsYouTube
பெக்கான் கடற்கரையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்
தற்போதைய செய்திகள்

பெக்கான் கடற்கரையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்

Share:

பெக்கான், ஜனவரி.02-

நெனாசி, கம்போங் தஞ்சோங் கடற்கரையில், விண்வெளியிலிருந்து விழுந்ததாகச் சந்தேகிக்கப்படும் மர்மப் பொருள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில், உள்ளூர்வாசி ஒருவர் இப்பொருளைக் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாக பெக்கான் போலீஸ் தலைவர் ஸைடி மாட் ஸின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பொருள் குறித்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன அமைச்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளமுடைய அப்பொருளானது, விண்வெளியில் இருந்து தான் விழுந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில் அப்பொருளானது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது என்பதும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி அப்பொருளானது தற்போது நெனாசி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்