ரவாங், செப்டம்பர்.27-
கடந்த வியாழக்கிழமை, ரவாங், புக்கிட் பெருந்துங் பகுதியில், பல உணவகங்களில் உலு சிலாங்கூர் நகராட்சி கவுன்சில் நடத்திய ஒருங்கிணைந்த சோதனையில், அதிர்ச்சியூட்டும் பல சுகாதார மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்ட இடங்களில் எலியின் கழிவுகள் காணப்பட்டதோடு, கழிப்பறைகளும் மிக அசுத்தமாக இருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், உணவு தயாரிக்கும் பணியாளர்கள் அடிப்படை சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 8 உணவகங்களுக்கு சுமார் 18,750 ரிங்கிட் அபராதம் விதித்த அதிகாரிகள், ஒரு உணவகத்தை 14 நாட்களுக்கு மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.








