கெடா, Jalan Teroi Titi Lahar - ரில் இரு சகோதரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் அவ்விருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் Honda RS-X ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயது Muhammad Zulqarnain Mohd Delmi, 11 வயது Ahmad Firashi Ilyas சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, Toyota Vios காரில் பயணித்த 61 வயது பெரியவர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து பொது மக்களிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Yan மாவட்ட போலீஸ் தலைவர் Deputi Superintendan Shahnaz Akhtar Haji கூறினார்.
Yan - னிலிருந்து Gurun - னுக்கு சென்று கொண்டிருந்த சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பயணிகள் எதிரே வந்து கொண்டிருந்த காரின் மீது மோதியதாக விசாரணையில் தெரிய வந்ததாக Shahnaz Akhtar அறிவித்தார்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த அவ்விருவர்களின் உடலும் சவப் பரிசோதனைக்காக Yan மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் இன்று தகவல் தெரிவித்தார்.








