Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் சட்டத்துறை அலுவலகம் அறிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் சட்டத்துறை அலுவலகம் அறிக்கை

கோலாலம்பூர், டிச. 28-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க விரும்பினால், அவர், மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 பிரிவின் முதலாவது விதியின் கீழ் கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டரசு பிரதேசத்தில் நிகழக்கூடிய எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனைக்கு ஆளாகும் நபருக்கு / பொது மன்னிப்பு வழங்குவதற்கும், அல்லது தண்டனையை ஒத்திவைப்பதற்கும் அல்லது தண்டனையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும் மாமன்னருக்கு அதிகாரம் வழங்குகிறது என்று சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 பிரிவின் இரண்டாவது விதியின் கீழ் நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ரத்து செய்வதற்கும், இடை நீக்கம் செய்யவும், தண்டனையை குறைப்பதற்கும் மாமன்னருக்கு அதிகாரம் வழங்குகிறது என்று சட்டத்துறை அலுவலகம் சுட்டிக்காட்யுள்ளது.

எனவே தம்முடைய எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு நஜீப் விரும்புவாரோயானால் மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்