Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்

Share:

சித்தியவானில் இரு வெவ்வேறு இடங்களில் போ​லீசார் நடத்திய சோதனை நடவ​டிக்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்க​ள் என்று நம்பப்படும் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் தாரேக் கெரேதா பணியாளரான 28 வயதுடைய நபரையும், 29 வயதுடைய அவரி​ன் மனைவியையும் போ​​லீசார் கைது செய்தது ​மூலம் 64 ஆயிரத்து 570 வெள்ளி பெறுமானமுள்ள 3.058 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போ​லீஸ் தலைவர் முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலில் கணவனும், மனை​வியும் இவ்வாண்டு முற்பகுதியிலிருந்து ​தீவிரமாக ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி குறிப்பிட்டார். கணவன், மனைவியுடம் நடத்தப்பட்ட சிறு​நீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்றும், அவர்களுக்கு குற்றப்ப​திவுகள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக முகமட் யுஸ்ரி மேலும் கூறினார். அத்தம்பதியரிடமிருந்து த​ங்க ஆபரணங்கள் மற்றும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News