Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டத்தோஸ்ரீ அந்தஸ்தை கொண்டவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டத்தோஸ்ரீ அந்தஸ்தை கொண்டவர் கைது

டிச.10-

சரவா மாநிலத்தில் 25 கோடி ரிங்கிட் மதிப்புள்ள கட்டுமானத் திட்டத்தில் லஞ்சம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் டத்தோஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

52 வயது மதிக்கத்தக்க அந்த பிரமுகர், நேற்று மாலை 6.35 மணியளவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஏதுவாக அவர் இன்று கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை ஐந்த நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை SPRM பெற்றுள்ளதாக அந்த ஆணையத்தின் வட்டாரம் தெரிவித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →