கோலாலம்பூர், நவம்பர்.01-
பூடி மடானி ரோன்95 மானியத்தின் கீழ் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோலின் அளவு மற்றும் தரம் குறித்து எழுந்த சந்தேகத்திற்குரிய புகார்களைத் தொடர்ந்து, கேபிடிஎன் நடத்திய விசாரணையில் அமைச்சால் அமல்படுத்தப்பட்ட மானியங்களில், சட்டங்கள் எதுவும் மீறப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போதுமான அளவில், ரோன்95 எரிபொருள் இல்லை என்று கூறப்படும் ஆறு புகார்கள் வந்ததை அடுத்து, அமலாக்க அதிகாரிகள் எரிபொருள் பம்புகளை ஆய்வு செய்து விற்பனைப் பதிவுகளைச் சரிபார்த்ததாக கேபிடிஎன் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்துள்ளார்.
நுகர்வோருக்கு விற்கப்படும் ரோன்95 பெட்ரோலின் அளவிலோ அல்லது தரத்திலோ எந்த ஒரு முறைகேடுகளையும் நாங்கள் கண்டறியவில்லை என்றும் அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








