கோம்பாக், ஆகஸ்ட்.27-
கடந்த சனிக்கிழமை பத்துகேவ்ஸ் 1 இல் ஒரு கட்டட வளாகத்தில் ஜாலூர் கெமிலாங் கொடி, தலைகீழாகக் கட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த கட்டட வளாக உரிமையாளரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் காலை 11.29 மணியளவில் தாங்கள் போலீஸ் புகாரைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. கட்டட உரிமையாளர் அளித்த வாக்குமூலத்திற்கு ஏற்ப தற்போது விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








