Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் சுல்தானை சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமரின் துணைவியார்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் சுல்தானை சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமரின் துணைவியார்

Share:

மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை சிங்கப்பூர் பிரதமரின் துணைவியார் டத்தின் படுக்கா ஹோ சிங் மற்றும் அக்குடியரசின் உள்துறை, சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பானது, ஜோகூருக்கும், சிங்கப்பூருக்கும் இருந்து வரும் நீண்ட கால எல்லைத் தாண்டிய நட்பையும், நல்லெண்ணத்தையும் காட்டுகிறது என்று சுல்தான் இப்ராஹிம் வர்ணித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ஜோகூர்பாரு, புக்கிட் செரேனா அரண்மனையில் இச்சந்திப்பு நடைபெற்றது. சுல்தானுடன் ஜோகூர் அரசியார் ராஜா ஸரித் சொபியாவும், துங்கு மாக்கோத்தா ஜோகூர், துங்கு இஸ்மாயிலும் கலந்து கொண்டனர்.

Related News